வெள்ளி, 12 அக்டோபர், 2012

மக்கள் கணினி மையம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் மூலம்
வருவாய் துறையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் மின் ஆளுமை மாவட்டமாக
(இ-கவர்ன்னஸ்) மாவட்டமாக கடந்த 2010 அக்டோபர் 15ம் தேதி முதல்
செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. இதற்காக டில்லி தகவல் மற்றும் தொழில்நுட்ப
அமைச்சக துணை இயக்குனரகத்தால் நிர்வாக அனுமதி பெற்றப்பட்டது.பொதுவாக
வருவாய் துறையில் ஜாதி, வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெற அந்தந்த
தாலுகா அலுவலகத்துக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.

ஆனால், மின் ஆளுமை திட்டத்தின் கீழ் அனைத்து தரப்புமக்களுக்கும் தாங்கள்
வசிக்கும் கிராமத்தில் மற்றும் பகுதியில் இருந்தபடியே மக்கள் கணினி மையம்
மூலம் துல்லியமாகவும், வெளிப்படைதன்மையாகவும், விரைவாகவும் தங்களுக்கு
வேண்டிய சன்றிதழ்கள் மற்றும் குறிப்பிட்ட உதவிகளை பெற முடியும். இந்த
திட்டம் மூலம் அனைத்து அரசு துறை அலுவலகங்களும் கம்ப்யூட்டர்
மயமாக்கப்படும்.முதல் கட்டமாக இந்த திட்டத்தை வருவாய் துறையில் செயல்படுத்த
அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் ஆர்.ஐ., அலுவலகங்களில் இண்டர்நெட்
வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் வருவாய் துறை

சார்பில் வருமானச்சான்று, ஜாதிச்சான்று, குடியிருப்பு சான்று, ஆதரவற்ற

விதவை சான்று, முதல் பட்டதாரி சான்றிதழ் ஆகியவையும், சமூக நலத்துறையில்

வழங்கப்படும் திருமண உதவித்தொகை, இரு பெண் குழந்தைகள் திட்டம்

உதவித்தொகையும், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட

மற்றும் பழங்குடியினர் துறைகளின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை

திட்டம் ஆகியற்றில் பாமர மக்கள் பயன் பெறும் வகையில் அந்தந்த கிராமங்களில்
தோற்றுவிக்கப்பட்டுள்ள மக்கள் கணினி மையம் மூலம் விரைந்து
செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செவ்வாய், 2 அக்டோபர், 2012


சஹாஜ் களர்பதி

அரசு மூலம் பொது சேவை மையத்தை நிறுவியுள்ள சஹாஜ் நிறுவன ம்""இம்மையத்தின் மூலம் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, புகைப்படம் எடுத்தல், ரயில் டிக்கெட் முன்பதிவு, தொலைபேசி, மின் கட்டணம் செலுத்துதல், கலர் பிரிண்ட், ஜெராக்ஸ், சிட்டா எடுத்தல் உள்ளிட்ட 36 வகையான சேவைகளை பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.கிருஷ்ணகிரி மின் ஆளுமை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் அனைத்து சேவைகளும் செயல்படுத்தப்படுகிறது.அறிவியல் ரீதியிலான அனைத்து பயிற்சிகளையும் கிராமப்புற மக்களும் பெற வேண்டும் எனும் நோக்கத்தில் களர்பதி பகுதியில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

திங்கள், 1 அக்டோபர், 2012


களர்பதியில்

வருமானச்சான்றிதழ்,இருப்பிடச்சான்றிதழ்,சாதிச்சான்றிதழ்,கம்ப்யூட்டர்ஜாதகம்

சாஹாஜ் சேவைகள்

மின்சாரக்கட்டணம்,சான்றிதழ்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்http://www.krishnagiri.tn.nic.in/